Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 607பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 71ஆயிரத்து 718பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 900பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 573பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 45ஆயிரத்து 211பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.