Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 87ஆயிரத்து 918பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 931பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 85ஆயிரத்து 179பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை பத்து இலட்சத்து 78ஆயிரத்து 715பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.