Reading Time: < 1 minute

கனடியர்களில் சுமார் 70 வீதமானவர்கள் குழந்தைகளுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்துவதை ஆதரிக்கின்றனர் எனத் தெரிவிக்கிறது.

Tamil Business Directory

தட்டம்மை நோய்த்தொற்று பல மாகாணங்களில் பரவி வரும் வேளையில், இந்த புதிய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் நடத்திய இக்கருத்துக் கணிப்பு மே 20 முதல் 23 வரை சுமார் 1,700 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் 69 வீதமானவர்கள் குழந்தைகள் playschool அல்லது பள்ளிக்கு செல்லும் முன் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் ஒன்ராறியோ மாகாணத்தில் அக்டோபரிலிருந்து 1,800 தட்டம்மை நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆல்பெர்டா மாகாணத்தில் மட்டும் 628 சம்பவங்கள் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்ராறியோ மற்றும் நியூ பிரன்ஸ்விக் மாகாணங்களில் பள்ளிக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆனால் இதுபோன்ற கட்டாய விதிமுறைகள் நாடு முழுவதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.