Reading Time: < 1 minute

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில், இம்முறை நீண்ட குளிர்காலம் நிலவுமென, காலநிலை வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Tamil Business Directory

பல பகுதிகள் ஏற்கனவே இம்மாதம் சாதனை அளவிலான பனிப்பொழிவுகளை சந்தித்துள்ள நிலையில், இந்நிலை குளிர்காலம் முழுக்க நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, தெற்கு ஒண்டாரியோ தொடக்கம் தெற்கு கியூபெக் வரையில் வாழும் மக்கள், வழமையை விட அதிக குளிர் மற்றும் பனிப்பொழிவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது சிறந்ததென, Weather Networkஇன் தலைமை காலநிலை வல்லுநர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மட்டுமே, முன்னதான இலை துளிர் காலத்துக்கு சாத்தியங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.