Reading Time: < 1 minute

கனடாவில் பயங்கர தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் 13 வயதான சிறுவன் ஒருவனை 24 மணித்தியால இடைவெளியில் இரண்டு தடவைகள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் குயிலிப் பிரதேசத்தில் வைத்து இந்த சிறுவன் கைது செய்பய்பட்டுள்ளான்.

24 மணித்தியால இடைவெளியில் இரண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கியதாக குறித்த 13 வயது சிறுவனையும், மற்றுமொரு 16 வயது சிறுவனையும் பொலிஸார் கைது செய்து, நிபந்தனை அடிப்படையில் விடுவித்துள்ளனர்.

விடுதலையான 13 வயது சிறுவன் மீண்டும் மற்றுமொருவரை கொடூரமாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் இரண்டு தடவைகள் 24 மணித்தியால இடைவெளியில் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

சிறுவனிடமிருந்து பொலிஸார் ஆயுதமொன்றையும் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.