Reading Time: < 1 minute

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.

மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் இன்று கனடாவுக்கு பயணம் செய்வதற்கு தயாராக இருந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்னர். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.