Reading Time: < 1 minute

கனடாவின் ஒஷாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

வென்வோர்த் மற்றும் சீடர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்த போது ஆண் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் எனவும் அவர் பின்னர் உயிரிழந்து விட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.