Reading Time: < 1 minute

ஒஷாவாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வைத்து சுடப்பட்ட 17 வயதுச் சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், பின்னர் அங்கே தடயவியல் ஆய்வு அதிகாரிகளும் பிரசன்னமாகி ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்;புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விண்செஸ்டர் வீதி மற்றும் சிம்கோ வீதி வடக்கிற்குதெற்கே, ஹில் ரைஸ் கோர்ட் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.