Reading Time: < 1 minute

எட்மண்டன் பகுதியில் 73 வயதான முதியவரை வாகனத்தில் மோதிவிட்டு சென்ற சாரதியை கைது செய்ய பொலிஸார், தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tamil Business Directory

இந்த விபத்தில் காயமடைந்த குறித்த முதியவர், தற்போது ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது குறித்த வாகன சாரதியை அடையாளங் கண்டு கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5:50 மணியளவில், 102ஆவது வீதியில் உள்ள ஜாஸ்பர் அவென்யூவின் தெற்கே இருந்து வடக்கு நோக்கி குறித்த பாதசாரி கடக்கும்போது, ஜாஸ்பர் அவென்யூவில் மேற்கு நோக்கி பயணித்த ஒரு சிறிய கருப்பு எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக் ரக வாகனம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, எட்மண்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.