Reading Time: < 1 minute

கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

மோசடிமிக்க கல்வி அனுமதிகளைத் தடுப்பதற்காக
மேலும், கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

மோசடிமிக்க கல்வி அனுமதிகளைத் தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.

குறிப்பாக, 1,550 க்கும் மேற்பட்ட கல்வி அனுமதிகள் போலி அனுமதி கடிதங்களுடன் தொடர்புடையவை என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து வந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களுகு விண்னப்பித்த மொத்த விண்ணப்பங்களில் 40% நிராகரிக்கப்பட்ட நிலையில், சீன மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் 25% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கனடா அக்கறை கொண்டுள்ள போதிலும், இந்திய மாணவர்கள் கனடாவில் தொடர்ந்து கல்வி கற்பதை விரும்புவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்திருந்தார்.