கனடாவில் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை பாதிக்கும் வகையில் புதிய சுகாதார கட்டண மாற்றங்களை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மே 1ஆம் தேதி முதல், கனடா அரசு Interim Federal Health Program (IFHP) திட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டம், மாகாண அல்லது தனியார் காப்பீடு இல்லாத அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு தற்காலிக சுகாதார சேவைகளை வழங்கும் முக்கிய திட்டமாகும்.
புதிய மாற்றங்களின் படி:
- ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கும் $4 கட்டணம் வசூலிக்கப்படும்
- பல் சிகிச்சை, கண் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆலோசனை போன்ற சேவைகளுக்கு 30% செலவை பயனாளர்கள் தாங்களே ஏற்க வேண்டும்
இந்த முடிவுக்கு எதிராக, நாடு முழுவதும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Torontoவில் நடைபெற்ற பேரணியில் பேசிய குடும்ப மருத்துவர் Ritika Goel,
“நம் நாட்டில் உள்ள உலகளாவிய சுகாதார அமைப்பை பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மக்களை பாதிக்கும் அமைப்பை நாம் ஏற்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “அனைவருக்கும் சமமாக மருத்துவ சேவைகள் கிடைக்கும் அமைப்பையே நாம் ஆதரிக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.