Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்றோவில் இதுவரை 124,868 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
அதன்படி தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரொறன்றோவில் மொத்தம் 197,155 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
சிலர் தடுப்பூசியின் இரண்டாவது அளவுகளைப் பெற்றுள்ளதால், தடுப்பூசி போடப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை மொத்த தடுப்பூசி அளவைக் காட்டிலும் குறைவாக காணப்படுகின்றது.
யூனிட்டி ஹெல்த் ரொறன்றோ, யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வேர்க், மைக்கேல் கரோன் மருத்துவமனை, ஹம்பர் ரிவர் மருத்துவமனை, நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ ஹெல்த் நெட்வொர்க் மற்றும் சன்னிபிரூக் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.




