Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 911பேர் மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 95ஆயிரத்து 707பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 729பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 816பேர் பாதிக்கப்பட்டதோடு 191பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 76ஆயிரத்து 067பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 874பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.