கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணம் உட்பட பல குற்றங்கள் தொடர்பாக உலகம் முழுவதும் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் மூவர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிறையில் இருக்கும் லோரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது நண்பர் என்று கூறப்படும் கோல்டி பிரார் என அறியப்படும் சதிந்தர்ஜீத் சிங் ஆகியோர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியேஇ ஜூன் 2023-ல் நிஜ்ஜாரை மரணிக்கச் செய்ய உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மொத்தம் 37 சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இந்திய சமூகத்தினரை அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற பெரும் குற்றங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2023 நவம்பரில் ஒரு பிரபல இந்திய நடிகர் மற்றும் பாடகரின் வான்கூவர் இல்லத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டிற்கு பிஷ்னோய் பொறுப்பேற்றதாகவும் கூற்ப்படுகின்றது. அதுமட்டுமல்லாது “எங்களிடமிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது” என்று பஞ்சாபி மொழியில் ஒரு பேஸ்புக் பதிவில் எச்சரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.