கனடாவில் பல ஆண்டுகளாக கவனம் பெற்றிருந்த ‘Bread Price-Fixing’ வகுப்பு வழக்கின் கீழ், தகுதி பெற்ற நுகர்வோருக்கு நட்டஈடு பணம் வழங்கும் நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது.
Loblaw Companies Limited மற்றும் George Weston Limited ஆகிய நிறுவனங்கள் தொடர்பான $500 மில்லியன் நட்டஈடு உடன்படிக்கையின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கையாளர்களுக்கு பணம் Interac e-Transfer அல்லது காசோலை மூலம் வழங்கப்படுகிறது.
Canadian Packaged Bread Class Actions Settlement இணையதளத்தின் தகவல்படி, மே 11, 2026 வாரத்திலிருந்து பணம் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகள் இருப்பதால், அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணம் கிடைக்காது; படிப்படியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்டஈடு, 2001 முதல் 2021 வரை கனடாவில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக pre-packaged bread அல்லது அதனுடன் தொடர்புடைய bread products வாங்கியவர்களுக்கு பொருந்தும். கோரிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 12, 2025 அன்று முடிவடைந்ததால், தற்போது புதிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
முன்னர் Loblaw வழங்கிய $25 gift card திட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு $49.11 வழங்கப்படும். அந்த gift card திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு $24.11 வழங்கப்படும். காசோலை மூலம் பணம் பெற தேர்வு செய்தவர்களுக்கு, cheque processing செலவாக $2 குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த $500 மில்லியன் உடன்படிக்கையில், Loblaw மற்றும் George Weston இணைந்து $404 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளன. மீதமுள்ள $96 மில்லியன், 2017-ல் அறிவிக்கப்பட்ட Loblaw gift card திட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Bread price-fixing தொடர்பான குற்றச்சாட்டுகள், கனடாவில் 2001 முதல் 2015 வரை packaged bread பொருட்களின் விலை தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டவை. Loblaw மற்றும் George Weston ஆகிய நிறுவனங்கள் 2024 ஜூலை மாதத்தில் இந்த வழக்குகளை தீர்க்க $500 மில்லியன் settlement-க்கு ஒப்புக்கொண்டன.
Settlement நிர்வாகிகள், e-Transfer மூலம் பணம் பெற தேர்வு செய்தவர்கள் தங்கள் email inbox, junk மற்றும் spam folders-ஐ சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த நட்டஈடு தொடர்பாக text message அனுப்பப்படாது என்பதால், மோசடி link-கள் மற்றும் phishing செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.