கனடாவில் விற்பனை செய்யப்பட்டுவரும் குழந்தைகளுக்கான குறிப்பிட்ட வகை மர விளையாட்டுக் கூண்டு கேட்டை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடிய சுகாதார திணைக்களம் பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
“HARPPA Wooden Baby Playpen Gate” என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட 24 அங்குல உயரம் கொண்ட, சுருக்கி விரிக்கக்கூடிய மர தடுப்பு கேட்தான் தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள திருகுகள் காலப்போக்கில் தளர்ந்து கேட்டிலிருந்து கழன்று விழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சிறுவர்கள் தவறுதலாக விழுங்கும் அபாயம் இருப்பதால், மூச்சுத்திணறல் அல்லது காயம் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கனடாவில் அக்டோபர் 2024 முதல் மே 2025 வரையிலான காலத்தில், இந்த தயாரிப்பின் சுமார் 473 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 10, 2026 வரையிலான காலத்தில், திருகுகள் கழன்று விழுந்தது தொடர்பாக நிறுவனத்திற்கு நான்கு புகார்கள் கிடைத்துள்ளன. எனினும், இதுவரை எந்த குழந்தைக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
இந்த தயாரிப்பை வாங்கிய பெற்றோர்கள் மற்றும் நுகர்வோர், அதனை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, மாற்று கேட் பெறுவதற்காக HARPPA நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.