Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் விற்பனை செய்யப்படும் முட்டை தயாரிப்புகளில் ‘சல்மோனெல்லா’ பக்டீரியா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில், அந்தத் தயாரிப்புகளை மீளப்பெறுமாறு கனடிய உணவு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

‘சுப்ரீம் லிக்விட் ஹோல் எக்ஸ்’ (Supreme Liquid Whole Eggs) மற்றும் ‘சுப்ரீம் லிக்விட் எக் வைட்ஸ்’ (Supreme Liquid Egg Whites) ஆகிய திரவ நிலை முட்டை தயாரிப்புகள் இந்த எச்சரிக்கை அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கிராம் எடையுள்ள பொதிகளில் விற்கப்படும் இந்தத் தயாரிப்புகளில், மார்ச் 24 முதல் மே 7 வரையான காலாவதி திகதியைக் (Best-before dates) கொண்ட தொகுதிகள் (Lots) மீளப்பெறப்படுகின்றன.

இந்தத் தயாரிப்புகள் பொதுவாக உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுபவை என்று தெரிவித்துள்ளது.

மீளப்பெறப்பட்ட இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என நுகர்வோரை கனடிய உணவு ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

சல்மோனெல்லா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.