Reading Time: < 1 minute

Brampton நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற தொடர் தீவைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மூன்று வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு இழுவை வாகனங்கள் (tow trucks) தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து Peel Regional Police தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதிகாலை சுமார் 1:14 மணியளவில் Airport Road மற்றும் Countryside Drive அருகிலுள்ள Cassinway Road பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இழுவை வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனைத் தொடர்ந்து 1:31 மணியளவில் Bovaird Drive West மற்றும் McLaughlin Road அருகிலுள்ள Legend Lane பகுதியில் மற்றொரு வாகனம் தீக்கிரையானது.

மேலும், 1:40 மணியளவில் Worthington Avenue பகுதியில் நான்காவது வாகனமும் தீயில் சிக்கியது.

இந்த சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

இவ்வனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு (Arson) சம்பவங்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல்கள் அல்லது CCTV / Dash cam காட்சிகள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.