டொரோண்டோ நகரில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த தொடர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 59 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Mark Hardy என்ற நபர், கடந்த ஜனவரி 15 முதல் ஏப்ரல் 16 வரை நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குறைந்தது ஐந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அவர் அடுக்குமாடி குடியிருப்புகளின் சேமிப்பு அறைகளை உடைத்து பொருட்களை திருடியதுடன், சில சமயங்களில் குடியிருப்புவாசிகள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 18 முறை அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இவர் தேடப்பட்டு வருகிறார்.
சந்தேகநபர் சுமார் 5 அடி 10 அங்குல உயரம், 200 பவுண்ட் எடை, மொட்டைத் தலை மற்றும் பச்சை நிறக் கண்கள் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் அல்லது கண்டவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




