டொராண்டோவில் நடைபெறவுள்ள FIFA ரசிகர் திருவிழாவிற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மாநகர சபையின் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டொராண்டோ மேயர் Olivia Chow பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை தயாரிக்க நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை Fort York மற்றும் The Bentway பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த FIFA ரசிகர் திருவிழா ஆரம்பத்தில் இலவச நிகழ்வாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பின்னர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளை முன்னிட்டு, $10 நுழைவுக் கட்டணம் மற்றும் $100 முதல் $300 வரை VIP கட்டணங்கள் வசூலிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
இது குறித்து மேயர் Olivia Chow, மக்கள் ஏற்கனவே சொத்து வரி மூலம் இத்தகைய பொதுநிகழ்வுகளுக்கு நிதி வழங்கிவருகின்றனர் என்பதால், கூடுதல் கட்டணம் விதிப்பது பொருத்தமல்ல என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்வை பாதுகாப்பாகவும் இலவசமாகவும் நடத்துவதற்கான மாற்றுத் திட்டத்தை அடுத்த வாரம் நகர சபையில் சமர்ப்பிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.