ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.