Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார், காருக்குள் ஒரு கத்தி, ஒரு சூட்கேஸ் முதலான சில விடயங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்கள்.

Tamil Business Directory

அந்த சூட்கேசை திறந்த பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த சூட்கேஸ் வெடிகுண்டாக மாற்றப்பட்டிருந்தது.

வெடித்துச் சிதறினால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை பயங்கரமாக காயப்படுத்திக் கொல்லும் வகையில் அந்த சூட்கேசுக்குள் நூற்றுக்கணக்கான கூர்மையான ஆணிகள் இருந்த நிலையில், சூட்கேசை வெடிக்கச் செய்வதற்காக அதனுடன் வயர்களும் இணைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்த சூட்கேசை வெடிக்கச் செய்வதற்கான பேட்டரி தனியே வைக்கப்பட்டிருந்துள்ளது.

அதிலிருந்து, அந்த நபர் அந்த வெடிகுண்டை வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்று வெடிக்கவைக்க திட்டமிட்டுள்ளது புரிவதாகவும், அவர் வெடிகுண்டுகள் செய்வதில் கைதேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாகவும், பாதுகாப்புத்துறை நிபுணரான Neil LeMay என்பவர் தெரிவித்துள்ளார்.

அதிக அளவிலான மக்களை கொல்வது மற்றும் காயப்படுத்துவது அந்த நபரின் நோக்கம் என்றும் Neil LeMay தெரிவித்துள்ளார்.

அந்த நபரின் பெயர் ஆண்ட்ரூ திமோத்தி வாக்கர் (Andrew Timothy Walker, 36) என்றும், அவர் Strathcona என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ மீது ஆயுதம் வைத்திருந்தது, வெடிகுண்டு வைத்திருந்தது முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.