Reading Time: < 1 minute

ஈரானும் அமெரிக்காவும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றிற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

Tamil Business Directory

இந்நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலிருப்பதாக ஈரானிய கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் மொத்த ஈரானிய நாகரீகத்தையே, அதாவது, ஈரானை முழுமையாக அழித்துவிடுவேன் என மிரட்டியிருந்தார்.

ட்ரம்பின் வார்த்தைகள் ஈரானில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் ஈரானியர்களுக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.

சரி, இப்போதைக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஈரானிலிருக்கும் எங்கள் உறவினர்கள் மின் தடை இல்லாமல் இருக்கமுடியும் என்பது சந்தோஷமான விடயம்தான். ஆனால், அதற்குப் பிறகு என்ன ஆகுமோ என நினைத்தால் பயமாக இருக்கிறது என்கிறார் கனடாவில் வாழும் ஈரானியரான Rogina Aselfallah.

மொத்த ஈரானிய நாகரீகத்தையே அழித்துவிடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ள விடயம் எங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறும், Sam Fayaz, ரொரன்றோவில் மளிகைக் கடை ஒன்றை நடத்திவருகிறார்.

அங்கே ஈரானில் ஈரான் மக்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை, அவர்களுக்காக நாம்தான் குரல் கொடுக்கவேண்டும் என்கிறார் அவர்.

ஆக, போர் நிறுத்தம் ஒரு தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றாலும், அதற்குப் பின் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஈரானில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்கள் மனதிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.