கனடாவின் தெற்கு வான்கூவர் தீவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா நகரின் மேற்கே அமைந்துள்ள சூக் (Sooke) பகுதியில் உள்ள ஒரு தனி வீட்டில், தீப்பிடித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பி.சி. மரண விசாரணை அமைப்பு இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, இதில் குற்றச் செயல்கள் எதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை” என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.




