Reading Time: < 1 minute

கனடாவின் செயின்ட் ஜோன் நகரில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 15 பேரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 69 வயது முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

குறித்த நபர் எந்த எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு, மே 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார்.

2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 19 வரை, குறித்த முதியவர் அந்நிறுவனத்தில் தங்கியிருந்த 15 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாதுக்காப்பற்ற நிலையில் இருந்ததால், இது சவாலான மற்றும் சிக்கலான விசாரணையாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் மரியாதையை காக்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த எங்கள் விசாரணையாளர்கள் சிறந்த முறையில் கடமையாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 21ஆம் திகதி சம்பவம் தொடர்பான தகவலை பெற்றதையடுத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

இந்த முதியோர் பராமரிப்பு மையத்தில் நான்கு குடியிருப்பு இல்லங்களாகப் பிரிக்கப்பட்ட 100 நீண்டகால பராமரிப்பு படுக்கைகள் உள்ளன.

சம்பவத்திற்குப் பிறகு, வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளதாக லொக் லோமண்ட் வில்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி கிங் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.