Reading Time: < 1 minute

மெக்ஸிக்கோவிற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்காக கனடா அரசு புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலைமை “தீவிரமாகவும் வேகமாக மாறிக்கொண்டிருப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கவுடாலாஜாரா மற்றும் பியுட்ரோ வலார்டா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மாநிலத்தின் பல நகரங்களில் குற்றக் குழுக்கள் எரியும் வாகனங்களைப் பயன்படுத்தி சாலைகளை மறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பியுட்ரோ வலார்டா நகரில் ‘வீட்டிலேயே தங்கும்’ (shelter-in-place) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டாக்ஸி மற்றும் ரைடு-ஷேர் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள கனடியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கனய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும், ஊடகங்கள் மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, தற்போது 18,703 கனடியர்கள் மெக்ஸிக்கோவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.