Reading Time: < 1 minute

அல்பெர்டா மாகாணம் தனியாக பிரிந்து செல்வதற்கான இயக்கம் முன்னேறுவதை எதிர்த்து, தனது கட்சி கனடாவின் ஐக்கியத்தை பாதுகாக்க போராடும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

எங்கள் கன்சர்வேட்டிவ்கள் முழுமையாக கூட்டாட்சி கட்சியாளர்கள்” எனவும், தனது குழுவில் ஒருவரும் அல்பெர்டா பிரிவினையை ஆதரிக்கவில்லை எனவும் பொலியேவ் தெரிவித்துள்ளார்.

பொலியேவ் தன்னை ஒரு பெருமைமிக்க கூட்டாட்சி ஆதரிப்பாளர் மற்றும் “அல்பெர்டாவில் பிறந்த, வளர்ந்தவர்” என கூறியுள்ளார்.

ஜனவரியில் கன்சர்வேட்டிவ் மாநாட்டில் வழங்கிய உரையில், லிபரல் கட்சியின் கொள்கைகளுக்கே பிரிவினை இயக்கங்களுக்கு வழிவகுத்ததாக பொலியேவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஒட்டாவா அல்பெர்டாவின் எரிசக்தி துறையையும் கியுபெக் பிராந்திய அதிகாரத்தையும் தடுக்க முயற்சித்துவருகிறது என தெரிவித்துள்ளார்.