Reading Time: < 1 minute

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் துப்பாக்கி வன்முறை குறைவாக இருந்தாலும், ஜி20 (G20) நாடுகளிலுள்ள பல நாடுகளை விட அதிக துப்பாக்கி தொடர்பான மரணங்கள் கனடாவில் பதிவாகி வருவதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தளமாகக் கொண்டு செயல்படும் சுயாதீன ஆய்வு அமைப்பான “Small Arms Survey” வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஜி20 நாடுகளில் துப்பாக்கி தொடர்பான கொலை விகிதத்தில் கனடா ஏழாவது இடத்தில் உள்ளது.

கனடாவில் 100,000 மக்களுக்கு 0.9 துப்பாக்கி வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விகிதம் ரஷ்யா, இந்தியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 நாடுகளில் துப்பாக்கி கொலை விகிதத்தில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. அங்கு 100,000 மக்களுக்கு 22.37 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிரேசில் (18.65) மற்றும் அமெரிக்கா (6.74) ஆகியவை உள்ளன.

மறுபுறம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் 100,000 மக்களுக்கு 0 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சீனாவில் இந்த விகிதம் 0.03 ஆகும். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் அமைந்துள்ள டம்ப்லர் ரிட்ஜ் (Tumbler Ridge) சமூகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த சம்பவத்தில் சந்தேகநபரை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.