Reading Time: < 1 minute

ஓக்வில் (Oakville) பகுதியில் $200,000-ஐ விட அதிக மதிப்புள்ள ஒரு லக்சரி வாகனத்தை (SUV) வாங்க போலி அடையாள அட்டையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகிய 27 வயதுடைய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த சம்பவம் டிசம்பர் 11 அன்று, 227 Wyecroft Rd-ல் அமைந்துள்ள Budd’s Imported Cars என்ற வாகன விற்பனை நிலையத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹால்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்ததாவது, குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு Land Rover SUV வாங்க விருப்பம் தெரிவித்தார். வாகனத்தை வாங்க ஒப்பந்தமும் செய்யப்பட்டு, விநியோகத் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் பின்னர், அந்த நபர் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தியிருப்பது விற்பனை நிலைய ஊழியர்களால் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிறப்புச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள் (Driver’s Licences), சமூக காப்பீட்டு எண்கள் (SIN Cards) உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை, ஓஷாவா நகரைச் சேர்ந்த அம்படி அஜீவ் (Ambady Ajeev) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மோசடி தொடர்பான பல குற்றச்சாட்டுகளும், மேலும் probation உத்தரவை மீறியதற்கான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

“வாகன திருட்டு பல்வேறு வடிவங்களில் நடைபெறலாம். உயர்ந்த மதிப்புள்ள வாகனங்களை கைப்பற்ற திருடர்கள் பல்வேறு தந்திரங்களையும் திட்டங்களையும் பயன்படுத்துவார்கள் என்பதற்கான இன்னொரு உதாரணம் இந்த சம்பவம்,” என டிடெக்டிவ்-சார்ஜென்ட் ஜேரட் மெக்லியோட் (Det.-Sgt. Jared McLeod) தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் உள்ளவர்கள் போலீசாரை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அல்லது Crime Stoppers மூலம் பெயர் தெரிவிக்காமல் தகவல் வழங்கலாம் என விசாரணை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.