Reading Time: < 1 minute

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி கூறியுள்ளார்.

Tamil Business Directory

முதல்லர் டக் ஃபோர்ட், ஒன்ராறியோவை சுற்றியுள்ள நூலகங்கள் வீதியோர (கர்ப்சைட்) புத்தக எடுப்பு, கொடுப்புகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், மேயர் ஜோன் டோரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்போது எங்களிடம் சுமார் ஒரு மில்லியன் புத்தகங்கள் உள்ளன. மேலும், எங்களிடம் சுமார் 40,000 ஆர்டர்கள் உள்ளன. மக்கள் விரும்பும் புத்தகங்களை எடுக்க விரும்புகிறார்கள்

எங்களிடம் 11 வங்கிகளில் தற்காலிகமாக அமைந்துள்ள உணவு வங்கிகளும் உள்ளன. நூலகம் மற்றும் உணவு வங்கி இரண்டையும் இயக்க முடியுமா அல்லது உணவு வங்கியை நகர்த்த முடியுமா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என கூறினார்.

ரொறன்ரோவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 22,957பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,904பேர் உயிரிழந்துள்ளனர்.