Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Tamil Business Directory

இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 189பேர் உயிரிழந்ததோடு, 1,274பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 62,046பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 31,010பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 26,993பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.