Reading Time: < 1 minute
Tamil Business Directory
போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி மீது வாகனம் மோதியதில், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பார்க்ஸைட் ட்ரைவ் அருகே நெடுஞ்சாலை 6இல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மோதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள சந்தியில், போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் அதிகாரி மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது, கடுமையான உயிராபத்தான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, விபத்தை ஏற்படுத்தியது யார் போன்ற விபரங்கள் எதுவும் பொலிஸாரால் வெளியிடப்படவில்லை. இவ்விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




