Reading Time: < 1 minute

தென்கிழக்கு கல்கேரியில் உள்ள தொழில்துறை கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

42ஆவது வீதி எஸ்.இ.யின் 6400 தொகுதிகளில் அமைந்துள்ள கட்டடத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 9:40 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கல்கரி தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தீ சுவர் மற்றும் கூரைக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்ததாகவும், இதன்போது ஆறு பேர் வெளியேற்றப்பட்டு, ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தீயிணை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியதாகவும், தீயை அணுகவும் அணைக்கவும் கட்டடத்தின் பல பகுதிகளில் உலோக கூரை மற்றும் சுவரின் பகுதிகளை வெட்டுவதற்கு நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இயந்திர வேலைகளின் விளைவாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.