Reading Time: < 1 minute
Tamil Business Directory
லண்டன் பகுதியில் காணாமல்போன இளைஞன் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
29 வயதான கைல் ரெட்ஃபோர்ட் என்பவர், ஸ்பிரிங் பேங்க் டிரைவ் மற்றும் கெர்னோகன் பார்க்வே அருகே டிசம்பர் 23ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இறுதியாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஆறு அடி உயரம் கொண்ட இவர், மெல்லிய உடலமைப்பு, குறுகிய மூடி கொண்ட வெள்ளை நிற ஆண் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.




