Reading Time: < 1 minute
Tamil Business Directory
லாயிட்மின்ஸ்டருக்கு வடக்கே பல வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டவுன்ஷிப் வீதி 510இற்க்கு அருகில் நெடுஞ்சாலை 17இல் இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளன, எத்தனை பேருக்கு காயம் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பொலிஸார், தீவிர விசாரணை நடத்து வருகின்றனர். அத்தோடு பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
லாயிட்மின்ஸ்டர், சாஸ்கடூனுக்கு வடமேற்கே 255 கிலோமீட்டர் தொலைவில், சஸ்காட்செவன்-ஆல்பர்ட்டா எல்லையில் உள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




