Reading Time: < 1 minute

சாஸ்கடூனில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 1.2 கிலோகிராம் மெத், துப்பாக்கி, வெடிமருந்துகள், பித்தளை நக்கிள்ஸ் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரின்ஸ் ஆல்பர்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

15 தெரு கிழக்கின் 500 தொகுதிகளில் உள்ள ஒரு வீட்டிலும், 26 தெரு கிழக்கின் 500 தொகுதிகளில் உள்ள ஒரு வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மெத்தின் மதிப்பு 100,000 அமெரிக்க டொலர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சோதனைகளின் போது கைத்தொலைப் பேசி மற்றும் சிறிய தொகை பணம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட 36 வயதான ஒருவர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும், 32 வயதான நபர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல், குற்றத்தால் பெறப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல், கைது செய்வதை எதிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் சுமத்தியுள்ளனர்.