Reading Time: < 1 minute

சாஸ்கடூனின் மிகப்பெரிய நகர மையங்களின் தலைவர்களுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Tamil Business Directory

எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்தை நடைபெறும் என்பதனை பிரதமர் அலுவலகம் உறுதிப் படுத்தியுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜஸ்டின் ட்ரூடோ சாஸ்கடூனில் மேயர் சார்லி கிளார்க் மற்றும் ரெஜினா மேயர் மைக்கேல் ஃபோர்ஜெர் ஆகியோருடன் எதிர்காலத்தில் பேசுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக மீண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு கல்கரி மற்றும் எட்மண்டன் மேயர்களுடன் ட்ரூடோ ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஆரம்பத்தில், செவ்வாய்க்கிழமைக்கு இந்த பேச்சுவார்த்தை நடத்த தற்காலிகமாக தீர்மானிக்கப்பட்டுள்ள போது, இது உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை அதிகாரிகள் கூறுகின்றனர்.