Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியா- பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகில் நான்கு கரடிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர் சேவை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கரடிகள் சுட்டுக் கொல்லப்படும் வரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே பத்திரமாக பாதுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒகனகன் பிராந்தியத்திற்கான ஆய்வாளர் டோபே ஸ்ப்ராடோ, இதுகுறித்து கூறுகையில், ‘ஒகஸ்ட் முதல் இந்த குறிப்பிட்ட கரடிகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் சேவைக்கு 44 புகார்கள் வந்துள்ளது.

குப்பை மற்றும் பழங்களால் ஈர்க்கப்பட்டு குறித்த பகுதிக்குள் கரடிகள் நுழைகின்றன. அதேவேளை குறித்த கரடிகள் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த புதன் கிழமை பிற்பகல், கரடிகளில் ஒன்று ஒரு நபரை தாக்க முற்பட்டுள்ளது’ என கூறினார்.

கடந்த மாதம், ஒன்ராறியோவின் மேற்குப் பகுதியில் பெண்ணொருவர் கரடி தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.