Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

ட்ரம்பின் இந்த யோசனையானது கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தை மிக மோசமாக பாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

இதனால் கனடிய ஒன்றாறியோ மாகாண ஏற்றுமதி துறை பெரும் பின்னடைவை எதிர் நோக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே வரிவிதிப்பு குறித்த நிறைவேற்று அதிகார உத்தரவு பிறப்பிக்கப்படும் என டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டால் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் எனவும் குறிப்பாக தொழில் வாய்ப்புகளுக்கு பெரும் தாக்கம் ஏற்படும் எனவும் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.