Reading Time: < 1 minute

ஒன்றாரியோவின் வாசாகா கரையோரப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

டுன்கோர்ன் அவன்யூ பகுதியில் தீ விபத்து குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதனையும் ஒன்றாரியோ பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த தீவிபத்து சம்பவம் சந்தேகத்திற்கு இடமானதாக தென்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.