Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹொகனான் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு அருகாமையில் நபர் ஒருவர் ஆயுதத்துடன் சுற்றித் திரிவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இதன்போது குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

இந்த முயற்சியின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் பற்றிய விவரங்கள் எதனையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.