Reading Time: < 1 minute

உலக அரங்கில் கனடாவிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது, இந்த ஆண்டின் உலகில் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடா தெரிவாகியுள்ளது.

Tamil Business Directory

இந்த வரிசையில் கனடா முதல் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சுற்றுலா காப்புறுதி நிறுவனம் இது தொடர்பில் ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின் பிரகாரம் உலகின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில் கனடா முதலிடத்தையும் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும் நோர்வே மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

எவ்வாறு எனினும் கனடா மிகவும் பாதுகாப்பான நாடு என்ற போதிலும் நாட்டின் சில காட்டுப் பகுதியில் நிலவிவரும் காட்டுத்தீயை அண்டிய பகுதிகளிலான காற்றை சுவாசிப்பதனால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் எனவும் இவ்வாறான பகுதிகளுக்கு சுவாச பிரச்சனையுடையவர்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வன்முறைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் வரிசை பட்டியலில் முதல் 15 இடங்களில் அவுஸ்திரேலியா, பிரித்தனியா, நெதர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.