Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினத்தை சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே ஒரு பழங்குடியின பிரதிநிதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரேரணை ஒன்றை சட்டசபையில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் மாகாணத்தில் சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினம் அறிவிக்கப்படவில்லை.
எனவே எதிர்வரும் காலங்களில் உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினத்தை சம்பளத்துடனான விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என புதிய ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர் சோல் மாமாகாவா கோரிக்கையை விடுத்துள்ளார்.




