Reading Time: < 1 minute

கனடாவின் மிஸிஸாகா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 82 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மிஸிஸாகாவின் 401ம் ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

ஒன்றாரியோவின் கோட்டாயிஸ் பகுதிக்கு அருகாமையில் இந்த வீதி அமைந்தள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து கொள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன்பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.