Reading Time: < 1 minute

கனடாவின் ரொன்ரோ நகரில் கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆகஸ்ட் இந்த மாதம் 14ம் – 15-ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் வீடு ஒன்றை உடைத்து கார் ஒன்றை கொள்ளையிட்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

எனினும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை. பின்னர் மறுநாள் வாகன தரிப்பிடத்தில் வைத்து கத்தி முனையில் வாகன உரிமையாளரை மிரட்டி வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதான மோஹித் போல் மற்றும் 17 வயதான சிறுவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.