Reading Time: < 1 minute

கனடாவில் காணாமல் போன பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ஒன்றாரியோ மார்க்கம் பகுதியில் குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த பெண் காணாமல் போயிருந்தார். யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துந்தனர்.

மார்க்கம் நகருக்கு நூறு கிலோமீட்டர் வட கிழக்கே காணப்படும் கவர்த்தா நதி பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யிங் ஸஹாங் என்ற 58 வயது பெண் ஒருவரை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணின் மரணத்துடன் 26 வயதான நபர் ஒருவர் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.