Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு வயோதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் டொரன்டோவின் நேர்த் யோர்க் பகுதியின் டன் மில்ஸ் மற்றும் கிளிப்வுட்ஸ் வீதி பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு இலக்காகி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக டொரன்டோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் ஆண் ஒருவரும் பெண்ணுறுவரும் படுகாயம் அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த இருவரையும் போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் 80 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் எவர் மீதும் இதுவரையில் சந்தேகம் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.