Reading Time: < 1 minute

வீடு ஒன்றில் வைத்து 34 வயது ஆண் ஒருவர் மீது காவல்துறையினர் மின் அதிர்ச்சித் தாக்குதலை மேற்கொண்ட வேளையில் குறித்த அந்த ஆண் உயிரிழந்த சம்பவம் மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

Morning Star drive மற்றும் Goreway drive பகுதியில் குழப்பகரமான சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தினைச் சென்றடைந்த அதிகாரிகளுக்கும் அங்கிருந்த ஆண் ஒருவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும், அதன்போது அதிகாரிகள் ஒருவர் அந்த ஆண் மீது மின் அதிர்ச்சி ஆயுதத்தினைப் பயன்படுத்தியதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.