Reading Time: < 1 minute

வீடு ஒன்றின் முகப்பின் மீது வாகனத்தை மோதிய சாரதி ஒருவர், வாகனத்தில் இருந்து இறங்கித் தப்பியோடிய சம்பவம் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

இன்று அதிகாலை நான்கு மணியளவில், Lumsden Avenue பகுதியில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்த கறுப்பு நிற மேர்சடிஸ் ரக வாகனம், Chisolm Avenueவில் உள்ள வீதி வளைவில் கட்டுப்பாட்டினை இழந்து வீதி சமிக்கைகள் சிலவற்றையும் மோதியவாறு அருகே இருந்த வீடு ஒன்றின் முகப்பின் மீது மோதி நின்றுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டினுள் உறங்கியவாறு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வீட்டின் மீது மோதிய வாகனத்தின் சாரதி, காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிச் சென்றதாகவும், எனினும் காலை எட்டு மணியளவில் அவர் சிறிய காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று சேர்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டின் கட்டுமானங்கள் இன்னமும் வதிவதற்கு பாதுகாப்பானதா என்பதனை ஆய்வு செய்வதற்காக, சம்பவ இடத்திற்கு கட்டுமான பொறியாளர்கள் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.