Reading Time: < 1 minute

ஹமில்ட்டன் பகுதியில் ஆண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதல் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

நேற்று அதிகாலை 1:30 அளவில், ஹமில்ட்டன் Rebecca Streetஇல் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் சம்பவ இடத்திலிருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள போதிலும், அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவிலலை.